நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. கடந்த 18-ம் திகதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டவிரோதமானது எனவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டு சிறைக் கைதிகளைப் போல் பேரவைக்கு அழைத்து வந்தனர் எனவும் அவர்கள் கட்டாயத்தின் பேரிலேயே வாக்களித்திருக்கின்றனர் எனவும் மனுவில் தெரிவிக்கபபட்டிருந்தது.
மேலும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டதாகவும் திட்டமிட்டே எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார் எனவும் இந்த வாக்கெடுப்பை மக்களும் நிராகரிக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை காலை இந்த வழக்கு அவசர வழக்காக முதலில் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.