தமிழக முதலமைச்சராக தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி இன்றையதினம் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய அறைக்கு சென்ற பழனிச்சாமி, அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனையடுத்து அவர் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியைத் ஆரம்பித்துள்ளர்h.
மேலும் 2016-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 500 மதுபானக்கடைகளை மூடுவது மற்றும் தொழில்புரியும் பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் உள்ளிட்டவை 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டு அத்திட்டங்களைச் செயல்படுத்திட ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது