புதிய அரசியல் சாசனம் குறித்த கூட்டு எதிர்ககட்சியின் அனைத்து யோசனைகளையும் அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்கும் கடப்பாட்டை அரசாங்கம் உதாசீனம் செய்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் சாசனம் உருவாக்கும் துணைக்குழுக்களில் கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தினர்கள் உள்ளடங்கியிருந்த போதிலும் அவர்களின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
14 யோசனைகளை தாம் முன்மொழிந்த போதிலும் அவை நிராகரிக்கப்பட்டது எனவும் கூட்டு எதிர்க்கட்சியினரின் எந்தவொரு யோசனையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் குறித்த விடயங்களில் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.