153
துருக்கி ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட படையினருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நாற்பது படையினருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நாற்பது படையினருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.
ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்தல், அரசியல் சாசனத்தை மீறிச் செயற்படுதல், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு பேணியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
Spread the love