152
வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. வடகொரியாவின் சிரேஸ்ட அதிகாரிகளை அமெரிக்காவிற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளில் இவ்வாறான சந்திப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் முதனிலை ஊடகங்களில் ஒன்றான வொஸிங்டன் போஸ்ட் ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ட்ராம்பின் அரசாங்கத்துடன் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தொடர்புகளை பேண விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஓர் கட்டமாகவே இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love