கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று செவ்வாய் கிழமை இரண்டாவது நாளாக தொடர்கிறது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும், இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜநா கால அவகாசம் வழங்கும் விடயத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணங்கிப் போக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களின் உணர்வுகளுக்கு புறம்பாக செயற்படக் கூடாது என்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு கடந்த தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணால் ஆக்கப்பட்டவர்கள், காணி, அரசியல் கைதிகள் விடயங்களை முதன்மை படுத்தி தங்களின் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கோரியிருந்தனர். மக்களும் அதற்கான ஆணையை வழங்கியிருந்தார்கள் ஆனால் தற்போது எங்களால் தெரிவு செய்யப்படட்டுள்ள பிரதிநிதிகள் அதற்கு மாறாக செயற்படுகின்றனர் என்றும் கவனயீர்ப்பில் ஈடு;பட்டுள்ள குற்றம் சாட்டிய அவர்கள் தாங்களும் சுழற்சி முறையில் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படபோவதாக குறிப்பிட்டுள்ளனர்