இந்தியாவின் நாகாலாந்தில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக முதலமைச்சர் டி.ஆர்.ஜெலியாங் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி விலகியதனைத் தொடர்ந்து நாகா மக்கள் முன்னணி தலைவர் சுர்ஹோஜெலி லெய்ஜைட்சூ புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாகாலாந்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஜெலியாங் முடிவு செய்தமைக்கு பழங்குடியின அமைப்பினர் எதிர்ப்பினைக் காட்டியிருந்தனர்.
இ;ப்பிரச்சினையை சரியாக கையாள தெரியவில்லை என ஜெலியாங்குக்கு எதிராக ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 49 பேரும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அவர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள நிலையில் ஜெலியாங் பதவி வலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.