178
இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுள்ள மீட்புப் படையினர் அவர்களை முகாம்களில் தங்க வைத்துள்ளனர் எனவும் இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
மேலும் குறைந்தது 50 நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாகவும் தலைநகர் ஜகார்த்தாவில் 1.5 மீட்டர் உயரத்துக்கு நீர் தேங்கியுள்ளதாகவும் பல பகுதிகளில் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் அடிக்கடி இடம்பெறும் வெள்ளப் பெருக்கு காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love