சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கருத்துக்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென முன்னாள் வெளிவிவகார அiமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவப் படையினரின் ஒழுக்கம் தொடர்பில் சந்திரிக்கா வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் இவ்வாறான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கை இராணுவப் படையினர் தொடர்ந்தும் யுத்த வலய பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என சந்திரிக்கா கூறியிருந்தார். தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை தொடர்பிலான நிறுவனத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் சந்திரிக்கா இவ்வாறான கருத்து வெளியிட்டமை பாரதூரமான ஓர் விடயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு பாதகமாக அமையக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.