204
ஜனாதிபதி மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் சு.சுகிர்தன் தெரிவித்து உள்ளார்.
வடமாகாண சபையின் 85அவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
இலங்கையை போதைவஸ்து இல்லாத நாடாக மற்ற வேண்டும் மதுபான நுகர்வு குறைவான நாடாக மாற்ற வேண்டும் என மேடைகளில் பேசி வருகின்றார். ஆனால் அது தொடர்பில் எந்த வினைத்திறனான செயலை அவர் முன்னெடுப்பதாக தெரியவில்லை.
ஆலயங்கள் , பாடசாலைகள் அருகில் மதுபான விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றினை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மதுபானசாலைகளை மூடுவதன் ஊடாகவே மதுபான நுகர்வை குறைக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி விரைந்து எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Spread the love