184
லிபியாவில் பெரும் எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். லிபிய நகரான ஸாய்வியாவின் கரையோரப் பகுதியில் ஆபிரிக்க சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் 87 சடலங்கள் கரையோதுங்கியுள்ளன.
மத்தியதரை கடல் வழியாக இத்தாலியை சென்றடைய இவர்கள் முயற்சித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விபரங்களை வெளியிட முடியாது எனவும் உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் வழியாக புகலிடம் கோரிச் செல்வோரில் பலர் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love