151
எந்த சட்டத்தின் கீழ் ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் உலப்பனேவில் அமைந்துள்ள காணி சுவீகரிக்கப்பட்டது என கட்சியின் தற்போதைய தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலப்பனேவில் அமைந்துள்ள ரோஹன விஜேவீரவின் காணி தொடர்பிலேயே அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, இந்தக் காணியை விஜேவீரவின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ரோஹன விஜேவீரவின் உலப்பனே இல்லத்தில் தற்பொழுது தொழிற்பயிற்சி நிலையமொன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love