150
இலங்கையில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானியா கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் வடமேல் மாகாணத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்று தாக்கப்பட்டதனை வன்மையாகக் கண்டிப்பதாக பிரித்தானியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மதச் சிறுபான்மையினர் மீதான சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் வன்மையாக கண்டிப்பதாகவும் எவ்வித அழுத்தங்களும் இன்றி தமது மதத்தை வழிபாடு செய்வதற்கான பூரண சுதந்திரமும் உரிமையும் இருக்க வேண்டுமென பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
Spread the love