இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்கப் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் ரொஸ்கம் தலைமையில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்களான டேவிட் பிரைஸ், ஜெரால்ட் ஈ கொனோலி மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர் அட்ரியன் ஸ்மித் ஆகியோரே இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும், ஜனநாயக நிறுவனங்களை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த பயணம் அமைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து திருப்தி கொள்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.