170
சர்வதேச சக்திகளுக்கு நாட்டை பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது என தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் நிலவி வரும் பிரச்சினைக்காக தீர்வுத் திட்டங்கள் புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அனைத்து மாகாணங்களுக்கும் சமவுரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச சக்திகள் நாட்டை பிளவடையச் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love