169
இலங்கையின் 20ம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாளைய தினத்துடன் ஓய்வு பெற்றுக்கொள்ளவிருந்த ரவீந்திர விஜேகுணவர்தனவின் சேவைக் காலத்தை ஆறு மாதங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்துள்ளார்.
1980ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் திகதி கெடட் உத்தியோகத்தராக ரவீந்திர விஜேகுணவர்தன கடற்படையில் இணைந்து கொண்டார். கடற்படையின் முக்கியமான பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் விசேட படகுப் பிரிவினை ரவீந்திர விஜேகுணவர்தன நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love