182
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேகநபர்களை 14 பேர்களுக்கு மத்தியில் கண்கண்ட சாட்சியமான சிறுவன் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னதாக அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. அதன் போது சந்தேக நபர்கள் இருவர் உள்ளிட்ட 14 பேர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
அதன் பின்னர் குறித்த படுகொலையை கண்ணால் கண்ட சாட்சியமான சிறுவன் அழைத்து வரப்பட்டு சந்தேக நபர்ககள் இருவரையும் அடையாளம் காட்டுமாறு கோரப்பட்டது. அதன் போது சந்தேக நபர்கள் இருவரையும் 14 பேருக்குள் சிறுவன் தெளிவாக அடையாளம் காட்டினான்.
அதன் பின்னர் குறித்த வழக்கு திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி ஷாலினி ஜெயபாலசந்திரன் முன்னிலையானார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, சந்தேக நபர்களிடம் நீதிவான் மரபணு பரிசோதனைக்காக உங்களுடைய இரத்த மாதிரிகளை எடுப்பதற்கு சம்மதமா ? என சந்தேக நபர்கள் இருவரிடமும் கேட்டார். அதற்கு இருவரும் தமது சம்மதங்களை தெரிவித்தனர்.
அதனை அடுத்து முதலாவது சந்தேக நபரினை வியாழக்கிழமை (23) யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து செல்லுமாறும் நீதிவான் உத்தரவு இட்டார். அத்துடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் இருவரையும் விளக்க மறியிலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
Spread the love