சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் அங்கத்துவத்திலிருந்து விலகிக் கொள்ள தென் ஆபிரிக்கா எடுத்த தீர்மானத்தை அந்நாட்டு மேல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தென் ஆபிரிக்காவின் இந்த தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும் விலகுவது தொடர்பில் பாராளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் சர்வதே குற்றவியல் நீதிமன்றிலிருந்து விலகும் தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு, மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலிருந்து விலகிக் கொள்ள உத்தேசித்துள்ளதாக தென் ஆபிரிக்கா கடந்த ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.