சிரிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் 20 கொலைகளை செய்துள்ளதாக குற்றம் சுமத்தி ஒஸ்ட்ரியாவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சொந்த நாட்டில் அவர் இவ்வாறு கொலைகளை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
27 வயதான நபர் ஒருவர் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். பயங்கரவாத அடிப்படையில் கொலைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிராயுத பாணியான காயமடைந்த படையினரை குறித்த நபர் சுட்டுக் கொலை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிரியாவில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக குறித்த நபரை நாடு கடத்த முடியாது என்பதனால் ஒஸ்ட்ரியாவிலேயே விசாரணைகள் நடத்தப்படுகின்றன.