காலம் தாழ்த்தப்பட்டாலும் நீதி நிலைநாட்டப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கால மாறு நீதிப் பொறிமுறை முனைப்புக்களில் எவ்வித பின்வாங்கல்களும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க முயற்சிகள் மெதுவாக இடம்பெற்றாலும் , இலக்குகள் எட்டப்படும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் தேவைகளுக்கு அடிபணிந்து செயற்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களிலும் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்யும் புதிய பயங்கரவாத எதிர் சட்டமொன்று வரையப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த உத்தேச சட்டம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.