ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்ச்சியில் சிக்கிவிட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார்.
மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை வெளியேற்றும் சூழ்ச்சித் திட்டமொன்றை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் இந்த சதி வலையில் சிக்கிவிடாது தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக அனைவரும் இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட்டால் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகமான நிலையை உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு செயற்படுவதனால் மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சுப் பதவிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய சாத்தியமுண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.