204
வடக்கின் தலைநகராக மாங்குளம் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நகர திட்டமிடல் பணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ளும் எனவும், ஏனைய அரச நிறுவனங்களை இணைத்துக் கொண்டு நகரத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் ரணவக்க தெரிவித்துள்ளார். மாங்குளம் நகரின் 36 ஏக்கர் பகுதி அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love