சிரேஸ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடையாள அணிவகுப்பு நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின்போது கல்கிஸ் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் கைது செய்து விளக்க மறியலில் வைத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்கள் அனைவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்துமாறு நீதவான் லோசனா அபேவிக்ரம வீரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த அடையாள அணி வகுப்பின் போது கீத் நொயார் பிரசன்னமாகியிருக்க வேண்டுமெனவும் மீளவும் அடையாள அணி வகுப்பு நடத்தப்படாது எனவும் அறிவித்துள்ளார்.