அமெரிக்காவில் உள்ள பாடசாலைகளில் மூன்றாம் பாலின மாணவர்கள், தங்கள் விருப்பப்படி கழிப்பறைகளை உபயோகிக்கலாம் என்ற முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அரசின் உத்தரவை, டிரம்ப் அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அமெரிக்காவில் உள்ள பாடசாலைகளில் மூன்றாம் பாலின மாணவர்கள், தங்களது விருப்பப்படி ஆண்கள் அல்லது பெண்கள் கழிவறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், மூன்றாம் பாலின மாணவர்களுக்காக ஒபாமா அரசு கொண்டு வந்த இந்தத் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். டிரம்ப்பின் இந்த புதிய உத்தரவு அமெரிக்க திருநங்கை சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.