விமல் வீரவன்சவின் ஜே.என்.பி.கட்சி பாராளமன்றில் தனித்து செயற்பட முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் பாராளுமன்றத்தில் தனி நபர்களாக குறித்த கட்சியின் ஐந்து உறுப்பினர்களும் செயற்பட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ள அவர் மகிந்தவின் தலைமையில் இனி செயற்பட முடியாது என்று விமல்வீரவன்ச தீர்மானித்துள்ளமையையும் வரவேற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி, சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறு விமல்வீரவன்ச சபாநாயகரிடம் கோரிய நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகுகின்ற போதும், தாம் தொடர்ந்தும் மகிந்த ஆதரவு அணியுடன் இணைந்தே செயற்படவிருப்பதாக விமல்வீரவன்ச இதன்போது பதிலளித்துள்hளர்.
இதேவேளை, இது குறித்த தமது தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி அறிவிக்கவிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.