208
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் சீன அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கைக்கு சென்றுள்ள உயர்மட்ட சீனப் பிரதிநிதிகள் குழுவினர் மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையுடன் மெய்யான நட்புறவை சீனா பேணி வருவதாகவும் தொடர்ச்சியாக இந்த உறவுகள் நீடிக்கும் எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
Spread the love