163
டுபாயில் நடைபெற்றுவரும் டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சம்பியன் தொடரின், பெண்கள் இரட்டையர் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று சானியா – பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி, அமெரிக்காவின் அபிகைல் ஸ்பியர்ஸ் மற்றும் ஸ்லோவேனியாவின் கதரினா ஸ்ரீபோட்னிக் ஜோடியை எதிர்கொண்டது. 1 மணி 18 நிமிடங்கள் நடந்த போராட்டத்தில், சானியா – ஸ்டிரிகோவா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில், ஸ்பியர்ஸ்- ஸ்ரீபோட்னிக் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
Spread the love