கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மற்றும் பரவிப்பாஞ்சான் மக்களின் காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஐனாதிபதியுடன் இன்று சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரச படையினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு – கேப்பாபுலவு, மற்றும் கிளிநொச்சி–பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அத்துடன் பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்றைய தினம் இராணுவத்தினருடன் நடாத்திய பேச்சுவார்த்தையில், காணிவிடுவிப்பு தொடர்பாக சாதகமான பதிலை வழங்குவதாக இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். இந்தநிலையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதியை இன்று சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.