205
கிளிநொச்சியில் கந்தசாமி கோவிலின் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அருகில் உள்ள பரவிப்பாஞ்சனிலும் நில விடுவிப்பிற்காக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டத்திற்கு முன்பாக இராணுவமுகாமிற்காக வழிபாடு நடத்திய படையினர் ஊர்வலமாகச் சென்றனர். அத்துடன் தென்னிலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்டவர்களும் தென்னிலங்கை நடனங்களை ஆடியதுடன் பௌத்த பிக்குகள் பிரித் ஓதியபடி சென்றனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலின் அருகே, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இயங்கிய கட்டிடம் பாரிய இராணுவத் தலைமையகமாக தற்போது பயன்படுத்தப்படுகிறது. இந்த இராணுவமுகாமிற்காகவே வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
உண்மையில் இவர்கள் கருணை போதிக்கும் புத்த பெருமானின் பக்தர்களாக இருந்தால் எங்கள் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் என்றும், புத்த பெருமானே எங்கள் பிள்ளைகள் எங்கே என்றும் முணுமுணுத்தபடி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்;.
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
Spread the love