மிக விரைவில் திட்டமிட்டபடி மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தெரிவித்துள்ளார். மேரிலாண்டில் சன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை தொடர்பில் காங்கிரஸ் கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு உரையாற்றிய அவர் தனக்கு முதலில் அமெரிக்க குடிமக்களின் நலன்தான் முக்கியம் எனவும் எனவே மெக்சிகோ எல்லையில் திட்டமிட்டபடி சுவர் கட்டும் பணி விரைவில் ஆரம்பமாகும் எனவும் கெட்ட மனிதர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவிற்கும் மெக்ஸிகோவிற்கும் இடையில் சுவர் கட்டும் திட்டத்தை செயல்படுத்தும் வண்ணம் கட்டுமானம் மற்றும் வடிவமைப்புக்கான வணிக திட்டங்களை அடுத்த மாதம் கொள்வனவு செய்ய உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சும் அறிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், உள்துறை அமைச்சர் ஜோன் கெல்லி ஆகியோர் மெக்சிகோ சென்று; பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.