துருக்கியில் இராணுவ சதிப் புரட்சி முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஜெர்மனியில் அடைக்கலம் கோரியுள்ளனர். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 136 பேர் இவ்வாறு அடைக்கலம் கோரியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் இராணுவ சதிப்புரட்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இவ்வாறு 136 புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2016 ஓகஸ்ட் மாதம் முதல் 2017 ஜனவரி மாதம் வரையில் இவ்வாறு துருக்கிப் பிரஜைகள் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர். இராணுவ அதிகாரிகள் எவருக்கும் புகலிடம் வழங்க வேண்டாம் என துருக்கி ஜெர்மனியிடம் கோரியுள்ளது.