பக்கச்சார்பாக செயற்பட்டு வரும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் பணியாளர்களுக்கு வீசா வழங்கப்படாது என இஸ்ரேல் அறிவித்துள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள இஸ்ரேல் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்குமாறு மனித உரிமை கண்காணிப்பக பணியாளர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகம் மெய்யாகவே மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நிறுவனமன்று என குற்றம் சுமத்தியுள்ள இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு அடிப்படையிலேயே மனித உரிமை கண்காணிப்பகம் பக்கச்சார்பான ஓர் நிறுவனம் என சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகம் அரசியல் நோக்கில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் எனவே நிறுவனத்தின் பணியாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படாது எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.