அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்கு முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் டைம்ஸ், சி என் என், பிபிசி மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் ஆகிய ஊடகங்களுக்கே இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் தெரிவிக்கையில் ஊடகங்கள் அனைத்துக்கும் பதிலளிக்க தாங்கள் கடமைப்பட்டுள்ள போதிலும் வெள்ளை மாளிகையில் இடம்பெறுபவை ஒவ்வொரு நாளும் ஊடகவியலாளர்களின் கமராக்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தவறான செய்திகள், தவறான வர்ணனைகள் மற்றும் தவறான தகவல்கள் வெளியாவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது எனத் தெரிவித்த அவர் வெளியப்படையாக ஆட்சி நடத்தும் ஒரு அரசை, ஊடகங்கள் தடையின்றி அணுக முடிவது என்பது தேச நலனுக்கு முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.