248
வவுனியா ராசேந்திரகுளம் கிராம மக்கள் வவுனியா மாவட்ட செயலக காரியாலயத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். ராசேந்திரகுளம் கிராமத்திலிருந்து தம்மை வெளியேறுமாறு வனப் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்தல் விடுத்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே அவர்கள் இந்தப் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நிரந்தரமாக வசித்து வந்த சுமார் 48 குடும்பங்கள் வனப் பாதுகாப்பு அதிகாரிகளினால் அந்தக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பல வருடங்களாக வசித்து வந்த தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love