ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையில் முன்னெடுக்கப்பட உள்ள சிரிய சமாதான பேச்சுவார்த்தைகள் மீளவும் தோல்வியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தை ஒழுங்கு முறைகள் தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
யார் யாரை சந்திப்பார்கள் என்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளை ரஸ்யாவே திரைமறைவில் வழிநடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னதாக நடைபெற்ற சிரிய சமாதானப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்க ரஸ்ய முரண்பாடு காரணமாக தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு குழப்ப நிலைiமைகள் தொடர்வதனால் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.