புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இன்று உண்ணாவிரதத்தைத் ஆரம்பித்துள்ளனர். இயற்கை எரிவாயு எடுப்பதற்கு ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 14ஆம் திகதி அனுமதி அளித்திருந்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் அழிவடைவதுடன் , அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் எனத் தெரிவித்தே இத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் மேற்கொள்கின்றனர்.
விவசாய பூமியான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மனிதகுலத்துக்கு பேரழிவு ஏற்படும் எனவும் இத் திட்டம் முழுமையாக கைவிடப்படும்வரை போராட்டம் தொடரும் எனவும்ம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் மக்கள் உண்ணாவிரதத்தைத் ஆரம்பித்தமையினால் அந்தப் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.