175
இந்தியாவின் மேகாலய மாநிலத்தில் லொறி ஒன்று வீதியின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
மேகாலய மாநிலம் கஹாசி ஹில் என்ற மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள், தேவாலயம் ஒன்றிற்கு செல்வதற்காக இன்று காலை லொறியில் பயணித்துள்ள நிலையில் லொறியானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்துள்ளவர்களுள் 9 பெண்கள் மற்றும் 13 வயது சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love