மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் வன்முறையாக வெடிக்கலாம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இளைஞர்களின் உயிர்களைக் கூட காவு கொள்ளக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். 1980களில் அப்போதைய அரசாங்கம் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க மேற்கொண்ட முயற்சியின் போது இளைஞர்கள் உயிரிழக்க நேரிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் தனியார் பல்கலைக்கழகங்கள் காணப்படுவதனால் அதன் தரம் குறைந்துள்ளதாககத் தெரிவித்துள்ளார். உயர்தரத்தில் மூன்று சாதாரண சித்தி உடையவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுக் கொண்டவர்கள் என்ற போதிலும், அது பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.