ஜேர்மனியில் தங்கி இருக்கும் குடியேறிகள்; மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமார் 3 ஆயிரத்து 500 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 43 பேர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக அந்நாடுகளில் இருந்து மக்கள் மேற்குலக நாடுகளை நோக்கி புலமட்பெயர்ந்து வருகின்றனர். பிரான்ஸ் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மேற்கு நாடுகளில் புலம்பெயர்நதோருக்கு அனுமதி அளிப்பதற்கு தயக்கம் ஏற்பட்ட போதும் இருப்பினும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.