பௌத்த மதக் கொள்கைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மனித நேயம் மற்றும் மனிதம் மட்டுமன்றி ஒழுக்க விழுமியங்களையும் அடக்கி ஒடுக்கி போட்டி மிக்க சமூகக் கட்டமைப்பு ஒன்றே தற்போது காணப்படுகின்றது எனவும் சமூக கட்டமைப்பினை தகர்த்து எறிவதற்கு மத கொள்கைகள் மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
எவர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தாலும் பௌத்த மதக் கொள்கைகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் பின்வாங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.