159
உத்தரப் பிரதேசத்தில் ஐந்தாம் கட்டமாக 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறன. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஐந்தாம் கட்டமாக இன்று 11 மாவட்டங்களைச் சேர்ந்த 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரு கோடியே 84 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்குப்பதிவு நடைபெறும் 5 மாவட்டங்கள் நேபாள மாநில எல்லையில் அமைந்துள்ளதனால் அங்குள்ள பல வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love