ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன் இலங்கை விவகாரம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார் எனவும் உலகின் அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் எவ்வாறான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ள அவர் முழு அளவிலான கால மாறு நீதிப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.