இலங்கையின் போதைப்பொருள் செயற்திட்டத்துக்கு தனது நாட்டின் உயந்த பட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி பவுரே (Danny Faure)ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ள சீசெல்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கைக்கும் சீசெல்ஸ் நாட்டுக்குமிடையில் சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் போன்ற துறைகளிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பிலும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. சீசெல்ஸ் சுற்றாடல், மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கான சுற்றுலாவில் கலந்து கொண்டுள்ளனர்.