169
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் மீளிணைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற தொடரின் போது அவர் காயமடைந்தார். தற்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் பூரண குணமடைந்துள்ளமை உறுதியாகியுள்ள நிலையில் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இணைந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்றாம் திகதி அன்டிகுவாவில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love