புதிய தேர்தல் முறைமை குறித்து சிறுபான்மை கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இந்த கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, புதிய தேர்தல்முறைமையால் சிறுபான்மை கட்சிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தனர்.
இதன்போது முன்வைக்கப்பட்ட யோசனைகளை பிரதமர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் நேற்றைய கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக, அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அண்மையில் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை சிறுபான்மை கட்சிகளுக்கு பெரும் அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.