172
பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளனர். பிரான்ஸின் செனட்ச சபை உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இந்தப் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய அரசியல் சாசன உருவாக்கம் போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.
Spread the love