பாடசாலைகளுக்குள் அடிப்படைவாத கூட்டங்கள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகவும் வேறும் அடிப்படைவாத கடும்போக்குவாத கொள்கைகளை மாணவர் மத்தியில் எடுத்துச் செல்லக்கூடிய நபர்கள், குழுக்கள் கூட்டங்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் அவசியப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்வி அமைச்சு, மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்களின் விசேட அனுமதியின்றி பாடசாலைகளில் எவ்வித கூட்டங்களையும் நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.