163
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் இலங்கைக்கு வர உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச் செயலாளரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பொதுசெயலாளர் குட்டாரெஸ், விரைவில் இலங்கை வருவதாக உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய பொதுச் செயலாளர் இதுவரையில் இலங்கை வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love