காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் சர்வதேச சமூகம் தலையீடு செய்யவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் தலையீடுகளுடன் காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் பிரதமரினால் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இதற்கான சட்ட மூலத்தின் 11 சரத்தில் உள்ள ‘அ’ பந்தி நீக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த பந்தியில் குறித்த அலுவலகம், காணாமல் போனோர் தொடர்பில் செயற்படுகின்ற தனியார் அல்லது ஒழுங்கமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இடமளிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அந்த பந்தி நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.