பாரம்பரியக்கலைகள் மக்கள் சமூகங்களுக்கு உரியவை. குறித்த சமூகங்களது பங்குபற்றலகள், படைப்பாற்றல்கள் மூலமாக மேற்படிகலைப் பண்பாட்டுப் பாரம்பரியங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை மேற்படி சமூகங்களது நினைவாற்றல்களிலே மிகப் பொரும்பாலும் உயிர் வாழ்கின்றன.
ஆயினும் எழுத்துபனுவல்களில் இடமும் முக்கியத்துவம் உடையதாகவே காணப்படுகின்றது. பெரும் புலவர்கள் எழுத்துப் பனுவல்களை ஆக்கியிருப்பினும், மேற்படிபனுவல்கள் காலாதிகால ஆற்றுகைகளின் வழி மாற்றங்களைபெற்றுவந்திருப்பதும் காணக்கூடியது.
ஏனெனில் ஆற்றுகைக்கு ஏற்பதகைமைக்கும் சூழ்நிலைகள், புதியபாடல்களைக் கட்டிப்பாடும் சூழ்நிலைகள் என இன்னபிறகாரணங்களால் மூல எழுத்துபனுவலின் பல்வேறுபாடங்கள் புழக்கத்தில் பரவியிருப்பது சாதாரணமானது.
நேர்த்திக்காகவும், தேவைக்காகவும், பயிற்சிக்காகவும் ஆர்வத்தின் காரணமாகவும் எழுத்துப்பனுவல்களை மீளஎழுதிவழங்கும் மரபும் சமூகங்களில் காணமுடியும். இது எழுத்துப் பனுவல்களின் பேணுகையையும் பரவுகையையும் வலுப்படுத்தும் நடைமுறையாகசமூகங்களில் காணப்படுகின்றன.
எழுத்துப் பனுவல்களை ஆக்கியபுலவர்கள் அதற்கான சன்மானங்களைப் பெறுவதுண்டு. ஆற்றுகைக்கானஎழுத்துப் பனுவல்களை ஆக்குவதுபேறாகக் கொள்ளப்படும் மரபுண்டு. தமக்குக் கிடைத்த படைப்பாக்க கொடையைமக்கள் மேன்மைக்கு பயன்படுத்துவது கடமை என்பதுஅந்தநம்பிக்கை.
ஆற்றுகைக்கான எழுத்துப்பனுவல்களைப் பேணிவருபவர்கள் சன்மானமாக சிறுதொகைப்பணத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையுமுண்டு. அதேவேளை சமூகக்கடமையாகவழங்கியுதவும் நடைமுறையுமுண்டு. பாரம்பரியமாகஆற்றுகைகள் முன்வைக்கப்படுகின்ற சூழல்களின் பண்பாட்டுப்பாரம்பரியம் இவ்வாறானதாகக் காணப்பட, இதன் மறுதலையாகநவீனஅறிவுச் சூழல் காணப்படுகின்றது.
சிறுதொகைபணம் கொடுத்தோஅல்லது இலவசமாகவோ பெற்றுக்கொள்ளும் எழுத்துப் பனுவல்களைதமக்கான உரிமங்களுடன் பதிப்புக்களைச் செய்யும் நடைமுறை அதிகாரபூர்வமானதாகக் காணப்படுகின்றது. இவ்வாறு பதிப்பிக்கப்பெற்ற நூல்களைச் சமர்ப்பித்து பதவிஉயர்வுகளுக்கான புள்ளிகளைச் சம்பாதித்துக் கொள்வது நிகழ்ந்துவருகின்றது.
இங்குதான் பண்பாட்டு மரபுரிமைகள் பற்றியஅறிவும் உரையாடலும் அவசியமாகின்றன. உள்ளூர் அறிவுதிறன் செயற்பாடுகள் சார்ந்த பாதுகாப்புஏற்பாடுகள் பற்றியசிந்தனையின் அவசியத்தேவைஉணரப்படவேண்டியதாக இருக்கிறது.
இல்லையெனில் காலனியக் கல்விகட்டவிழ்த்து விட்டிருக்கும் சிந்தனைகளால் வழிநடத்தப்படும் காலனியச் சமூகங்கள் நாகரிகமற்றதென, அறிவுபூர்வமற்றதென கைவிட்டுவிட்ட, கைவிட்டுவிடுகின்ற பண்பாட்டு பாரம்பரியங்கள் அதன் முக்கியத்துவம் அறிந்தவர்கள், உணர்ந்தவர்களால் உரிமம் கொள்ளப்பட்டுவியாபாரம் ஆக்கப்படும் பொழுதுஅவற்றைப் பணம் கொடுத்துநுகரும் ‘நவீனநாகரிகர்கள்’ஆவதுவளர்ச்சியாகவும் விருத்தியாகவும் கொண்டாடப்படுகிறது.
கலாநிதி. சி. ஜெயசங்கர்